மதுரையில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஆந்திரா அமைச்சரின் மகன் - நீதிபதி முன் வந்த நெஞ்சு வலி

x

மதுரையில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஆந்திரா அமைச்சரின் மகன் - நீதிபதி முன் வந்த நெஞ்சு வலி

கொலை வழக்கில் குற்றவாளியாக உறுதி செய்யப்பட்ட ஆந்திரா முன்னாள் அமைச்சர் பினிபே விஸ்வரூப்பின் மகன், ஸ்ரீகாந்த் மதுரையில் கைது செய்யப்பட்டார். மதுரையில் பதுங்கியிருந்த அவரது நடமாட்டத்தை கண்காணித்து ஆந்திர போலீசார் பிடிக்க முயன்றபோது, காரில் தப்பி ஓடிவிட்டார். மதுரை - அருப்புக்கோட்டை சாலையில் சினிமா பாணியில் துரத்தி சென்று போலீசார் ஸ்ரீகாந்தை கைது செய்த சம்பவம் திருமங்கலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிபதி முன்பு ஆஜர் படுத்தியபோது நெஞ்சுவலி என்ற ஸ்ரீகாந்துக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்