இரவோடு இரவாக சிக்கிய அரசு ஊழியர் - கையும் களவுமாக சுற்றிவளைத்த அதிகாரிகள்

x

தேன்கனிக்கோட்டையில் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சாய் கீதா என்ற சார்பதிவாளர் தரகர்கள் மூலம் லஞ்சம் பெற்று, இரவில் காரில் எடுத்து செல்வதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சாய் கீதாவிடம் வழங்க நடவடிக்கை எடுத்தனர். பத்திரப்பதிவு மூலம் கிடைத்த 6 லட்சத்து 38 ஆயிரம் லஞ்சப்பணத்தை, சாய் கீதா காரில் எடுத்துச் சென்றபோது போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து விசாரித்த போலீசார், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்