`கொடநாடு வழக்கு' - வெளியான பரபரப்பு UPDATE

x

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி போலீசார் விசாரணை நிபுணர் குழுவின் விசாரணை அறிக்கை நகலை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்புக்கு வழங்க அரசுத்தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. முக்கிய குற்றவாளியான கனகராஜ் இறப்பதற்கு முன் 7 முறை வெளிநாட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதுதொடர்பாக இண்டர்போல் காவல்துறை மூலம் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருவதாகவும் கூறப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜூலை 24-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார். பின்பு பேசிய எதிர்த்தரப்பு வழக்கறிஞர், கொடநாடு பங்களாவை நீதிமன்றம் பார்வையிட கோரியிருப்பதாகவும், உண்மையான குற்றவாளியை கண்டுபிடிப்பதே தங்கள் கோரிக்கை என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்