பேரூராட்சி தலைவருக்கு ஆபாச கொலை மிரட்டல்? - பிரபல ரவுடிக்கு வலைவீச்சு

x

பேரூராட்சி தலைவருக்கு ஆபாச கொலை மிரட்டல்? பிரபல ரவுடிக்கு வலைவீச்சு

கன்னியாகுமரி மாவட்டம் அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்த பிபின் பிரியன் என்ற ரவுடி மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிபின் பிரியன் பலாத்கார வழக்கில் சிக்கியதால் மனைவி ஜெபபிரியா குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு சென்று

தகராறில் ஈடுபட்ட பிபின் பிரியனை போலீசார்

கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜாமினில் வெளிவந்த பிபின்பிரியன் தான்

சிறை செல்வதற்கு மணவாளக்குறிச்சி

பேரூராட்சி தலைவர் குட்டிராஜன்தான்

காரணம் என கூறி அவரிடம் போன் மூலம்

ஆபாசமாக பேசி கொலை மிரட்டல்

விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும்

குட்டிராஜனை கைது செய்ய கோரி

போலீசாரிடம் போனில் பிபின்பிரியன் வற்புறுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் குட்டிராஜன் அளித்த புகாரின் பேரில் போலீசார்

ரவுடி பிபின்பிரியன் உள்ளிட்ட இருவரை

தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்