குமரியில் விண் கல் மோதியதா?..பயங்கர சத்தம்.. திடீரென வெடித்த மலை முதல் கட்ட ஆய்வில் ஷாக் ரிப்போர்ட்
பத்துகாணி மலைப்பகுதியில் திடீரென பாறைகள் வெடித்து, உயரமான மலைப்பகுதியில் இருந்து உருண்டு கீழ் நோக்கி வந்துள்ளது. அப்போது, புழுதி பறக்க எழுந்த காற்றால் பகுதிவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், திங்களன்று இந்திய புவி அறிவியல் ஆய்வுகளுக்கான தேசிய மையம் நேரில் சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது. இயக்குநர் சலபதிராவ் தலைமையில் வல்லுநர் குழு ஒன்றும் பத்துக்கானி மேற்கு தொடர்ச்சி தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. நிலநடுக்கம் அல்லது விண் எரிகல் மோதலால் மலையில் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என, முதல் கட்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
Next Story