`ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு' அதிரடி காட்டும் CBCID போலீஸ் - வெளியான பரபரப்பு செய்தி
ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு' அதிரடி காட்டும் CBCID போலீஸ் - வெளியான பரபரப்பு செய்தி
நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த கரைசுற்றுபுதூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெயக்குமார் தன்சிங், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார்.
கடந்த மே மாதம் வீட்டின் முன்பு பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை நெல்லை மாவட்டம் உவரி காவல் துறையினர் மர்ம மரணம் என பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சிபிசிஐடிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்ட சூழலில், பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு 110 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு நான்கு முதல் ஐந்து பேர் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டு அவர்களது வாக்குமூலம் அனைத்தும் வீடியோ காட்சிகளாக பதிவு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வெளிமாநிலங்களில் உள்ள ஜெயக்குமாரின் உறவினர்களும் நேரடியாக வரவழைக்கப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.