"இந்த மாத இறுதியில் சம்பவம் இருக்கு" - வெளியானது இந்தியா, இலங்கை கிரிக்கெட் தொடரின் அட்டவணை

x

மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதற்காக, இந்த மாத இறுதியில் இந்திய அணி இலங்கை செல்லவுள்ளது. இந்நிலையில் இதற்கான போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 26-ஆம் தேதி தொடங்கவிருந்த டி20 தொடர் ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டு, ஜூலை 27-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அடுத்த 2 டி20 போட்டிகள் மற்றும் முதல் ஒருநாள் போட்டி ஆகியவை, ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு ஜூலை 28, 30 மற்றும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 2 மற்றும் 3-வது ஒருநாள் போட்டிகள் ஏற்கனவே அறிவித்தபடி ஆகஸ்ட் 4 மற்றும் 7-ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்