மருத்துவமனையில் நடந்த பயங்கர சம்பவம்... சிதறி ஓடிய நோயாளிகள்
மருத்துவமனையில் நடந்த பயங்கர சம்பவம்... சிதறி ஓடிய நோயாளிகள்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு பொது மருத்துவமனையில், இன்று காலை சுமார் 10.45 மணியளவில் பெண்கள் உள் நோயாளிகள் பிரிவு வார்டில், மேற்கூரை சிமெண்ட் கலவை திடீர் என்று பெயர்ந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக வார்டில் இருந்த யாருக்கும் எவ்வித காயம் ஏற்படாத நிலையில் அதிர்ச்சி அடைந்த நோயாளிகள் அச்சம் அடைந்து வார்டில் இருந்து உடனடியாக வெளியேறினர்.
இதனை அடுத்து அந்த பகுதியில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் மாற்று இடத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து, மருத்துவமனை கட்டிடங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story