ஆதி திராவிடர் நலத்துறை பெயரை மாற்ற வழக்கு - ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

x

ஆதி திராவிடர் நலத்துறை பெயரை மாற்ற வழக்கு - ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

தமிழகத்தில் 76 இனங்களை பட்டியல் இனத்தவர்கள் என

கண்டறியப்பட்டு, அவர்களுக்காக ஆதிதிராவிடர் நலத்துறை ஏற்படுத்தப்பட்டது. ஆதி திராவிடர் நலத்துறையின் பெயரை, பட்டியல் சாதிகள் நலத்துறை என அறிவிக்க கோரி சென்னையை சேர்ந்த மாரிமுத்து என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், பட்டியல் இனத்தவர்களுக்கான நலத்துறையின் பெயர் தவறாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருப்பதாகவும்,

ஆதி திராவிடர் என்பது பட்ட்டியலினங்களில் உள்ள 76 இனங்களில் ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டது. பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி மிகமது சபிக் அமர்வில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில், பெயர் மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டதாகவும், அந்த

குழு ஆய்வு செய்த போது, பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக எந்த பரிந்துரையும் வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பல விவாதங்கள் நடந்து வருவதாக கூறிய நீதிபதிகள், விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்