`தஞ்சை ஹெலிகாப்டர் சகோதரர்கள் நிறுவன வழக்கு' - கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

x

துபாயை சேர்ந்த முகம்மது யூசுப் சவுகத் அலி என்பவர் தாக்கல் செய்த மனுவில், கும்பகோணத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் கணேசன், சுவாமிநாதன், அவரது நண்பர் ரகு ஆகியோர், தாங்கள் வெளிநாடுகளில் ஹெலிகாப்டர் சேவை நடத்தி வருவதாகவும், தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரு மடங்காக திரும்பப் பெறலாம் என்றும் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நம்பி தனது மனைவி 10 கோடி ரூபாயை முதலீடு செய்த நிலையில், அவர்கள் அளித்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது ஏமாற்றியது தெரியவந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த நிலையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்று மனுதாரர் தெரிவித்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி முரளி சங்கர், இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள், பணம் ஆகியவற்றை வழக்கில் இணைக்கும் நடவடிக்கையை

தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர் இரண்டு மாதங்களில் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்