திருமணமான பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - முகநூலால் நேர்ந்த விபரீதம்
திண்டுக்கல் மாவட்டம் ரவுண்ட் ரோடை சேர்ந்தவர் கோபி. 35 வயதான இவருக்கு திருமணமான நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மனைவி உயிரிழந்திருக்கிறார். இதுதொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, தேனி மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் கோபிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவரை பிரிந்த அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி அழைத்து, கோபி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இது குறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்த நிலையில், கோபியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story