"பணம் வேண்டாம், உதவித்தொகை வேண்டாம்" - கலெக்டர் ஆபீஸ் முன் திடீர் பரபரப்பு
உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய சென்னை ஆட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பின்னர் பேசிய மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க நிர்வாகி, உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Next Story