ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தலைமுறை ஆண்கள் கொலை.. தீபாவளி கொண்டாட்டத்தில் பிரிந்த உயிர்கள்

x

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தலைமுறை ஆண்கள் கொலை.. தீபாவளி கொண்டாட்டத்தில் பிரிந்த உயிர்கள்

சாலபாக்க கிராமத்தில் தீபாவளி இரவில் கொண்டாட்டத்தின்போது பாத்துல ரமேஷ் என்பவரது குடும்பத்திற்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருதரப்பும் ஆபாசமாக பேசிக்கொள்ள ஒருகட்டத்தில் அடிதடி ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் பயங்கர ஆயுதங்களால் மோதிக்கொண்டனர். இந்த கோர சம்பவத்தில் பாத்துல ரமேஷ், அவரது மகன் பாத்துல சின்னி, அவரது பேரன் ராஜு ஆகியோர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக அந்திரா போலீசார் விசாரித்து வருகின்றனர். மூன்று பேரையும் கொலை செய்த மற்றொரு குடும்பத்தை சேர்ந்த ஆண்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்