"நான் வழக்கறிஞர், என்கிட்ட எப்படி பேசணும்னு..தெரியாதா?""போலீஸ் சீருடையை கழட்டி வச்சுட்டு வாங்க"...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தின் காவல் உதவி ஆய்வாளரான ராமு, கடந்த 13 ஆம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே ஒரே இரு சக்கர வாகனத்தில் 3 இளைஞர்கள் ஹெல்மெட் அணியாமல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இளைஞர்களை காவலர் பிடித்து விசாரணை செய்து கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த சேதராகுப்பம் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் இளைஞர்கள் மூவரையும் விடுவிக்குமாறு தகராறு செய்திருக்கிறார். பாலமுருகனை காவலர் கண்டித்து எச்சரித்த நிலையில், தான் ஒரு வழக்கறிஞர் எனவும், வழக்கறிஞருக்கான மரியாதையை தர முடியாதா எனக் கூறி காவலரை ஒருமையில் பேசிய பாலமுருகன், ஒரு கட்டத்தில் போலீஸ் சீருடைய கழட்டி வைத்து விட்டு தன்னுடன் சண்டைக்கு வருமாறு கூறி காவலருடன் மல்லுக்கட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story