மோசடியில் இறங்கிய முன்னாள் ராணுவ வீரர் - கேள்விக்குறியான இரண்டு பெண்களின் வாழ்க்கை

x

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்த வெங்கடேசன்- சத்தியபாமா தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களது படிப்பு செலவுக்காக வைத்திருந்த 10 லட்சம் பணத்துக்கு வட்டி தருவதாக கூறி முன்னாள் ராணுவ வீரர் பெருமாள் சாமி என்பவர் கடனாக வாங்கி சென்றுள்ளார். அவர் வட்டி தராததுடன் முதலையும் திருப்பி தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில், மகள்களின் படிப்பு செலவுக்கு பணம் இல்லாமல் தவித்த சத்தியபாமா குடும்பத்துடன் முன்னாள் ராணுவ வீரரின் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் பணத்தை தர மறுத்ததுடன் அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றி கேட்டை பூட்டி உள்ளார். இதனால் அந்த்க வீட்டின் முன்பு சத்தியாபாமா குடும்பத்துடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்