தந்தி மாலை செய்திகள் | Thanthi evening News | Speed News | Thanthi Short News (19.11.2022)
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...காசி தமிழ் சங்கமம் குறித்த குறும்படத்தையும் வெளியிட்டார்.
காசி - தமிழகம் பற்றிய "நெடுங்கால தொடர்பு" என்ற நூலை பிரதமர் மோடிக்கு வழங்கினார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்....தமிழகத்தின் பண்பாடும் கலாச்சாரமும் உத்தர பிரதேசத்தில் எதிரொலித்துக் கொண்டிருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு.
தமிழில் வணக்கம் என்று சொல்லி உரையை தொடங்கினார் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்...அனைவரையும் காசிக்கு வரவேற்கிறோம் என தமிழில் வரவேற்று மகிழ்ச்சி.
காசி தமிழ் சங்கமத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணம் பிரதமருக்கு எப்படி தோன்றியது என்பதை நினைத்து வியந்து மகிழ்கிறேன்...இசையமைப்பாளர் இளையராஜா பேச்சு.
பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கும் திட்டம்...10 ஆண்டுகளுக்கு பிறகு புதிய டிசைனில் அரசின் இலவச வேட்டி, சேலை.....ஜனவரி 10 ம் தேதிக்குள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மழை விட்டும் 9 நாட்களாக வடியாத வெள்ளநீர்....பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை.
அந்தமான் அருகே வலுப்பெற்றது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.....தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு.....தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.