ஈரோட்டில் இலவச மருத்துவ முகாம் - மக்களுக்கு மருத்துவர் K R பழனிசுவாமி - முக்கிய வேண்டுகோள்

x

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டியில் நாளை மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. கள்ளிப்பட்டியில் உள்ள மரகதம் ராமசாமி திருமண மண்டபத்தில், தமிழ்நாடு காஸ்ட்ரோ என்டரோலஜிஸ்ட் சார்பில் நடைபெறும் இந்த மருத்துவ முகாமில் தலைசிறந்த இரைப்பை குடலியல் நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர். எனவே, பொதுமக்கள் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மருத்துவ கல்வியாளரும், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவருமான கே.ஆர்.பழனிசுவாமி கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்