ஸ்ரீரங்கம் தாயாரை பார்த்து யானைகள் செய்த செயல் அப்படியே மெய்சிலிர்த்து நின்ற பக்தர்கள்

x

நவராத்திரியை ஒட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில், கோயில் யானைகள் சாமரம் வீசியும் மவுத் ஆர்கன் இசைத்தும் வழிபாடு செய்தன. நவராத்திரி விழாவுக்காக ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில், ரெங்கநாயகி தாயார் சன்னதி முன் உள்ள நவராத்திரி மண்டபத்திற்கு கோவில் யானைகளான ஆண்டாளும் லட்சுமியும் அழைத்து வரப்பட்டன. அங்கு நவராத்திரியை சிறப்பிக்கும் வகையில் தாயாருக்கு இரண்டு யானைகளும், சாமரம் வீசியும் மவுத் ஆர்கன் வாசித்தும் வணங்கின. பின்னர், இரண்டு யானைகளும் கோயில் அலுவலரிடம் வாழைப்பழம், பிஸ்கட்டுகளை பெற்றுச் சென்றன. கோயில் யானைகளின் இந்த வியத்தகு செயலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வியப்புடன் கண்டுரசித்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்