3 ஆண்டுகளாக வெளிச்சத்திற்கு வர போராடும் மக்கள் - பொங்கி எழுந்து போராட்டம்

x

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்காமல், சாய ஆலைக்கு மின் இணைப்பு வழங்குவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆவத்திப்பாளையம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 34 குடும்பங்களுக்கு, நீதிமன்ற வழக்கு காரணமாக 3 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. மின் இணைப்புக்கு அவர்கள் அளித்த விண்ணப்பங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அருகில் சாய ஆலைக்கு மின் இணைப்பு வழங்குவதை அறிந்து, 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி பஞ்சாயத்து தலைவர் பேசியதை அடுத்து கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்