இனி சாக்கடைக்குள் மனிதர்கள் இறங்க வேண்டாம் - களமிறங்கும் குட்டி ராட்சசன்

x

கழிவுகளை மனிதர்களே கைகளால் அள்ளும் முறையை ஒழிக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக, மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்யும் வகையில், முழுமையாக நீரில் மூழ்கக்கூடிய ரோபோக்களைப் பயன்படுத்தும் திட்டத்தை ஆயிரம் விளக்கு பகுதியில் தொடங்கியுள்ளது சென்னை மாநகராட்சி.

90 மில்லிமீட்டர் முதல் 2 ஆயிரம் மில்லிமீட்டர் சுற்றளவு கொண்ட துளைகளிலும் உள்ளே நுழையும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

கூடவே வடிகால்களில் அடைத்துள்ள கசடு மற்றும் குப்பை அடுக்குகளை துல்லியமாக மதிப்பிடும் வகையில், இந்த ரோபோக்களில் பாண்டோகிராஃப் 720p HD கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வடிகால்களின் இடுக்குகளில் நுழைவதற்கு ஏதுவாக, 'கிராலர்ஸ்' எனப்படும் சிறிய வகையான ரோபோக்களைப் பயன்படுத்தவும் சென்னை மாநாகராட்சி முடிவு செய்துள்ளது...

இந்த ரோபோக்களானது தடித்த கால்வாய் கசடுகளை கடக்கும் வகையிலும், ஒரு செயல்பாட்டில் 25 கிலோ வரையிலான வண்டல் மண்ணை நீர்வழிகளில் இருந்து அகற்றும் திறன் கொண்டவை.


Next Story

மேலும் செய்திகள்