6 வயது சிறுவனை கடித்து குதறிய நாய் - சென்னையில் மீண்டும் அதிர்ச்சி

x

கே.பி பார்க் 14வது பிளாக் பகுதியைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான அருண்குமாரின் 6 வயது மகன் ஹரீஷ் குமார் தனது வீட்டின் கீழ் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார்... அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஸ்டெல்லா என்பவரின் வளர்ப்பு நாயை அவரது 10 வயது மகன் வெளியில் அழைத்து வந்த நிலையில், திடீரென அந்த நாய் ஹரீஷ் குமாரைக் கடித்துக் குதறியுள்ளது... சிறுவன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்ரனர்... ஸ்டெல்லா, அவரது மகள் ப்ரீத்தா, மகன் அரவிந்த் ஆகியோர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. நாயானது விலங்குகள் நலவாரியத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்