அதிமுக திமுக கவுன்சிலர்கள் மோதல்... குறுக்கே வந்த டிஎஸ்பி - எரிமலையாய் வெடித்த பிரச்சனை
மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் பழமைய னது என்பதால், அதை இடித்து விட்டு 5 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்ட அரசு ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்து அகற்ற ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் கட்டிடத்தை யார் இடிப்பது என்பது குறித்து அதிமுக திமுக கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் வட்டாட்சியர், டிஎஸ்பி முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே ஒன்றிய கவுன்சிலர்கள் கட்டிடத்தை இடிக்கும் பணியை தொடங்கியதால் போலீசார் தடுத்து நிறுத்தின். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் தலையிட்டு பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என இரு தரப்பினர் கோரிக்கையாக விடுத்தனர்