ஆற்று மணலில் புதைந்து கிடந்த ஆண் சடலம் - கடலூரில் பரபரப்பு

x

கடலூர் மாவட்டம் வெள்ளாறு ஆற்று மணலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சடலமாக மீட்கபட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திட்டக்குடி அடுத்துள்ள வெள்ளாற்று மணலில், பாதி புதைந்த நிலையில் ஆண் சடலம் கிடந்ததால் பொது மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், உயிரிழந்தவர் யார் என்பது குறித்தும், நடந்தது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்