இரண்டாவது திருமணம் செய்த மாமா..மைத்துனர் ஸ்கெட்ச்.. பலியான சித்தப்பா..
திருப்பாசேத்தியை அடுத்த மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் தனக்கு குழந்தைகள் இல்லாததால், மனைவியின் அக்கா பிள்ளைகளான விஜய் மற்றும் நாகேந்திரனை தங்கள் மகன்கள் போல் பாவித்து வளர்த்து வந்துள்ளார். 4 வருடங்களுக்கு முன்பு விஜய், பவித்ரா என்ற பெண்ணை திருமணம் செய்த நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக பவித்ரா 2 ஆண்டுகளுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதை தொடர்ந்து, விஜய் கடந்த ஆண்டு இரண்டாம் திருமணம் செய்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த பவித்ராவின் சகோதரர் வேல்பாண்டி, அவரது நண்பர்களுடன் சேர்ந்து விஜய்யின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது விஜய் வீட்டில் இல்லாததால், அவரது சித்தப்பா வேல் முருகனை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், தலைமறைவாக இருந்த வேல்பாண்டி உட்பட ஐவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்