OFFICE முடிந்து சென்ற இளைஞர்- காட்டுக்குள் எலும்புக்கூடாக மீட்பு தீராத மர்மம்... தீவிர விசாரணையில்

x

கிருஷ்ணகிரி மாவட்டம், கதவணியைச் சேர்ந்த சம்பத் என்பவரின் மகன் தசரதன், ஓசூர் பாலாஜி நகரில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் 28-ஆம் தேதி அதிகாலை, நிறுவனத்தில் இருந்து வெளியே சென்ற தசரதன், தனது அறைக்குத் திரும்பவில்லை. இதுகுறித்து அவருடைய தந்தை, ஒசூர் சிப்காட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது, தசரதன் ஓசூரில் இருந்து பேரண்டப்பள்ளி வரை நடந்தே சென்றது தெரியவந்தது. இந்நிலையில், பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் உள்ள நீரோடையில் அழுகிய நிலையில் எலும்பு கூடாக ஒரு சடலம் கிடப்பதாக ஒசூர் ஹட்கோ போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், தசரதனின் பெற்றோரை அழைத்து வந்து காட்டியபோது, அங்கிருந்த உடைகளை வைத்து, அது தசரதனின் உடல் என்பது உறுதி செய்தனர். இதையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவருடைய இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்