சர்ப்ரைஸ் கொடுத்த ஆட்சியருக்கு காத்திருந்த Shock - ரத்தம் கொதிக்க சரமாரி கேள்வி
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டிய நிலையில் தமிழக அரசு நிதியில் இருந்து ஆறரை கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன... இப்பணிகள் முழுமையடையாமல் பாதியில் உள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த ஏரி சீர் அமைப்பு பணியை கண்காணிக்கவில்லை என்ற என விமர்சிக்கப்பட்டது... இதனை அடுத்து கூடுவாஞ்சேரி ஏரியில் திடீரென ஆட்சியர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். பணிகள் பாதியிலேயே நின்றிருப்பதைக் கண்டு கோபம் கொண்ட அவர் ஒப்பந்ததாரரைக் கடிந்து கொண்டு தவறுகளை சரி செய்ய உத்தரவிட்டார்.
Next Story