வகுப்பறைகளை சுத்தம் செய்ய உத்தரவு.. தாமாக முன்வந்த ஆசிரியர்கள்

x

காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம் அரசுப்பள்ளியில் காஞ்சிபுரம் ஆட்சியர், கலைச்செல்வி ஆய்வு மேற்கொண்டார்.

வரும் திங்கள் கிழமை முதல் அனைத்து பள்ளிகளும் திறக்க வாய்ப்புள்ள நிலையில், இந்த ஆய்வினை மேற்கொண்டார். குடிநீர் மற்றும் கழிவறைகள் சுத்தமாக உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, ஒரு வாரமாக மூடியிருந்த வகுப்பறைகளில் குப்பைகள் கிடந்தது. அதனை, ஆட்சியர் உடனே சுத்தம் செய்ய உத்தரவிட்டதையடுத்து, ஊராட்சி நிர்வாகத்தினருடன், பள்ளி ஆசிரியர்களும் தாமாக முன்வந்து பள்ளியை சுத்தம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்