புதுக்கோட்டை நீதிமன்றத்தில் புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டு விழா - தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

x

புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 15 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு செய்வதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் சமரச தீர்வு மைய திறப்பு விழா நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, சஞ்சய் விஜய்குமார் கங்காபுர்வாலா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, தமிழக அரசு தனது பட்ஜெட்டில், ஒரு சதவீதத்தையாவது நீதித்துறைக்கு ஒதுக்க முயற்சிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்