சிறையில் தாக்கப்பட்ட கைதி.. நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு | Thanthitv

x

ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் சிவக்குமார், சிறைத்துறை டிஐஜி வீட்டில்

வீட்டு வேலைக்கு சென்ற போது 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை திருடியதாக

கூறி, சிறை வார்டன் கடுமையாக தாக்கி தனிமை சிறையில் அடைத்துள்ளதாக கூறி, கலாவதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறையில் உள்ள சிவக்குமாரை நேரில் சந்தித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, வேலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிக்கு

உத்தரவிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்