பூதாகரமாக வெடிக்கும் - கோவில் அர்ச்சகர் பாலியல் வழக்கு - சிக்கப் போகும் - முக்கிய புள்ளிகள்...
திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் தொகுப்பாளரை மோசடி செய்த வழக்கில் மண்ணடி காளிகாம்பாள் கோவில் அர்ச்சகரான கார்த்திக் முனுசாமி மீது பாலியல் வழக்கு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மற்றொரு அர்ச்சகர் காளிதாஸுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கோவிலின் டிரஸ்ட் உறுப்பினர் நித்தீஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார். காளிகாம்பாள் கோவிலில் பெரிய அளவில் பிரச்சினை நடந்துள்ளதாக கூறியுள்ள அவர், இன்னும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், காளிகாம்பாள் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story