"மாநகராட்சி அதிகாரியால் பறிபோன உயிர்.." வெடித்த போராட்டம் | Chennai | Thanthitv

x

சென்னை பாரிமுனையில், சாலையோர வியாபாரி கிருஷ்ணவேணி மரணத்திற்கு காரணமான அதிகாரிகளை கைது செய்யக்கோரி சிஐடியூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலையோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்த கிருஷ்ணவேணியின் பழக்கூடைய பறித்து, மாநகராட்சி அதிகாரி கார்த்திக் குப்பை வண்டியில் ஏற்ற முயன்றார். அப்போது, பழங்களை எடுத்துக் கொண்டு ஓட முயன்ற கிருஷ்ணவேணி கீழே விழுந்து மரணம் அடைந்தார். அவருடைய மரணத்துக்கு காரணமான அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகாராட்சி சார்பில் கார்டு கொடுக்கப்பட்டுள்ள தங்களை மாநகராட்சி அதிகாரிகள் குற்றவாளிகள் போல் நடத்துகிறார்கள் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்