ஐகோர்ட் சென்ற நளினி..."முருகனுக்கு நாளை நேர்காணல்" - தமிழக அரசு சொன்ன தகவல் ...

x

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் உள்ள முருகன், பாஸ்போர்ட் பெறுவதற்காக இலங்கை தூதரக நேர்காணலில் பங்கேற்க அனுமதிக்கக் கோரி, முருகனின் மனைவி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முருகனின் நேர்காணலுக்காக இலங்கை தூதரகத்திடம் நாளை அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், முகாமில் இருக்கும் ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் பாஸ்போர்ட் பெறுவதற்காக அழைத்துச் செல்லப்பட உள்ளதாகவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நளினியின் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்