அசத்திய சென்னை ஐஐடி மாணவர்கள் - நாட்டையே திரும்பி பார்க்க வைத்த - `மைக்ரோ சிப்'
இந்தியாவிலே முதல் முறையாக வணிகப் பயன்பாட்டிற்கான முதல் மைக்ரோ சிப்பை வடிவமைத்து சென்னை ஐஐடி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். சென்னை ஐஐடியில், முதல் முறையாக இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, சாப்ட்வேர்கள் எழுதப்பட்டு தயார் செய்யப்பட்ட செக்யூர் ஐ.ஓ.டி என்கிற 26 நானோ மீட்டர் அளவு கொண்ட மைக்ரோ சிப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மைக்ரோ சிப்பை அறிமுகப்படுத்தும் விழாவில் மெட்ராஸ் ஐஐடி இயக்குனர் காமகோடி மற்றும் மாணவர்கள் பேசும்போது, இந்தியாவில் முதல் முறையாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த மைக்ரோ சிப்பை பயன்படுத்துவதால் பாதுகாப்பு அதிகரிக்கும் எனவும், டேட்டா வெளியில் கசிவது குறையும் எனவும் தெரிவித்தனர்.
Next Story