கரு.நாகராஜன் உட்பட 270 பேர் - பாஜகவினர் மீது - அதிரடியாக பாய்ந்த வழக்கு
சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 270 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தென்னிந்தியர்களை அவதூறாக பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகி சாம் பிட்ரோடாவை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட 270 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story