பேருந்து முன் படுத்துக்கொண்டு அலப்பறை... போதை இளைஞரின் பரபரப்பு காட்சி
தீபாவளி தினமான இன்று போதையில் பேருந்தின் முன் படுத்துக் கொண்டு அலப்பறை செய்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது... கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் போதையில் இருந்த இளைஞர் ஒருவர் அரசுப்பேருந்தை வழிமறித்து நடுரோட்டில் படுத்துக் கொண்டு நடத்துநரின் கால்களில் விழுந்து மன்றாடிக் கொண்டிருந்தார்... அவரை அங்கிருந்தவர்கள் அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தி அனுப்பி வைத்த நிலையில் சிறிது நேரத்திலேயே உளுந்தூர்பேட்டை கடைவீதியில் கொட்டும் மழையில் நடுரோட்டில் நின்று கொண்டு அனைவரையும் ஓரமாக செல்லுமாறு ஆபத்தான முறையில் அறிவுறுத்திக் கொண்டிருந்தார்... அவர் விருத்தாச்சலத்தைச் சேர்ந்தவர் என்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் சொந்த ஊருக்கு அனுப்ப போலீசார் முயன்று வருகின்றனர்.
Next Story