பெண்ணுக்கு சீட் மறுத்த நடத்துனர்... காதோடு விழுந்த அறை அதிர்ந்து போன பயணிகள்

x

ஒட்டன்சத்திரம் அருகே தனியார் பேருந்தை வழிமறித்து நடத்துனரைத் தாக்கிய இளைஞர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மதியம் கிளம்பிய தனியார் பேருந்தில் பயணித்த 2 பெண்களை, பழனி செல்லும் பயணிகளுக்கு இருக்கையை விட்டு எழுமாறு நடத்துனர் கூறியதாகத் தெரிகிறது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, அப்பெண்கள் தனது உறவினரிடம் தொலைபேசியில் நடந்ததைக் கூறியுள்ளனர்.

விருப்பாச்சி அருகே பைக்கை சாலையில் நிறுத்தி அந்த பேருந்தை வழிமறித்த இளைஞர் ஒருவர், நடத்துனர் ஈஸ்வரனை காதிலே அறைந்துள்ளார். தாக்குதலில் காயமடைந்த நடத்துனர் சத்திரப்பட்டி காவல்நிலையத்தில் புகாரளித்துவிட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்