"எமனாக மாறிய காட்டெருமை" - நடுங்க வைக்கும் பகீர் செய்தி
ராயப்பன்பட்டி மற்றும் சண்முகா நதி அணை பகுதியைச் சுற்றி அடிக்கடி வனவிலங்குகள் நடமாடுவதாக அப்பகுதியினர் கூறி வருகின்றனர். இந்நிலையில், ராயப்பன்பட்டியில் உள்ள தென்னந்தோப்பில் முருகன் என்ற கூலித்தொழிலாளி பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வழிதவறி வந்த காட்டெருமை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதேபோல், அருகேயுள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்த காட்டெருமை, வேல்மணி என்ற பெண்ணை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதைத் தொடர்ந்து, உயிரிழந்த முருகனின் சடலம் உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் தொடர்பாக காவல்துறை மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story