கூவத்தில் மறைக்கப்பட்ட சீக்ரெட் - ஹரிஹரனிடம் விடிய விடிய விசாரணை - நேபாளம் வரை நீண்ட Network

x

கூவத்தில் மறைக்கப்பட்ட சீக்ரெட் - ஹரிஹரனிடம் விடிய விடிய விசாரணை - நேபாளம் வரை நீண்ட Network

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் நால்வரை... போலீசார் இரண்டாம் கட்டமாக காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்னை பாலு, ராமு மற்றும் அருள் ஆகியோருக்கு 3 நாள் போலீஸ் காவலும், ஹரிஹரனுக்கு 5 நாள் போலீஸ் காவலும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதில், பொன்னை பாலு, ராமு மற்றும் அருள் ஆகியோரிடம் போலீசார் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டிருக்கும் ஹரிஹரனிடம்... சென்னை, மவுண்ட் ஆயுதப் படை பிரிவு அலுவலகத்தில் வைத்து போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி இருக்கின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் தேடி வரும் ரவுடி சம்போ செந்திலுக்கும், ஹரிஹரனுக்கும் 10 வருட கால நட்பிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வடமாநிலங்களிலும், நேபாளத்திலும் சம்போ செந்திலும் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த வழக்கில் கொலையாளிகளுக்கு பரிவர்த்தனை செய்யப்பட்ட 50 லட்ச ரூபாய் பணத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு, கூவம் ஆற்றில் கொலையாளிகள் எதற்காக தங்களின் செல்போன்களை வீசிச் சென்றனர் போன்ற கேள்விகளை எழுப்பி ஹரிஹரனிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி இருக்கின்றனர். மேலும், கூவம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட கொலையாளிகளின் செல்போன்கள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கும் நிலையில், ஆய்வக முடிவுகளின் அடிப்படையில் ஹரிஹரனிடம் போலீசார் விசாரணை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்