10 லட்ச ரூபாய் சம்பளத்தை உதறி தள்ளி புதிய சாதனை படைத்த இளைஞர்.. `மேட் இன் தமிழ்நாடு'

x

வெளி நாட்டில் 10 லட்சம் ரூபாய் ஊதியத்துடன் தான் பார்த்த வேலையை விட்டு விட்டு, சொந்த ஊர் திரும்பி, ட்ரோனை வடிவமைத்துள்ளார் தஞ்சையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்...

தஞ்சை ஸ்ரீநகர் கூட்டுறவு காலனியை சேர்ந்த தினேஷ் நாடு நாடாய் பறந்து பல உயர் நிறுவனங்களில் பணியாற்றியவர்... வெளிநாடுகளில் அவசர சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகளை டிரோன் மூலம் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த தினேஷின் கனவே அதை தன் சொந்த மண்ணில் செய்ய வேண்டும் என்பது தான்... அதற்காக 10 லட்சம் ரூபாய் ஊதியம் தரும் வேலையை விட்டு விட்டு தஞ்சை திரும்பிய தினேஷ், இரண்டே ஆண்டுகளில் தன் மனைவி அனு கிரகா கணேசனுடன் இணைந்து ட்ரோனை வடிவமைத்துள்ளார். சொந்த நாட்டுத் தயாரிப்பில் 3டி பிரிண்டிங் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ட்ரோன்களை ஸூகோ நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு பார்வையிட்டு பாராட்டி முதலீடு வழங்க முன்வந்தார். மலைவாழ் பகுதி மக்களுக்கு மருத்துவ உதவி மலைபோல் கஷ்டமானதாக உள்ள நிலையில், தினேஷ் வடிவமைத்துள்ள ட்ரோனால் மிக எளிதாகக் கொண்டு செல்ல முடியும்... மேலும் அறுவை சிகிச்சைக்குத் தேவையான அவசர மருந்து, உடல் உறுப்புகளை கால தாமதமின்றி போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் விரைவில் கொண்டு செல்ல முடியும். தொடர்ச்சியாக 1 மணி நேரம் வரை பறந்து செல்லக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ட்ரோன் 150 கிலோமீட்டர் வேகத்தில் 120 மீட்டர் உயரத்தில் 7 கிலோ எடையுள்ள பொருட்கள் வரை தூக்கிச் செல்லும்.


Next Story

மேலும் செய்திகள்