மருத்துவமனை நிலத்தை சிப்காட்-க்கு மாற்றம்..? நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Thanjavur

x

தஞ்சை செங்கிப்பட்டி காசநோய் சானிடோரியம் மருத்துவமனைக்கு சொந்தமான 220 ஏக்கர் நிலம் சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்கு கையகப்படுத்தப்படும் என்ற அறிவிப்புக்கு தடைகோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவமனைக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் பாரத் பெட்ரோலிய எரிவாயு நிறுவனத்திற்கும், 103 ஏக்கர் நிலம் சிட்கோ நிறுவனத்திற்கும், உணவுப் பூங்காவிற்கு 35 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டுவிட்டது என மனுதாரர் கூறியுள்ளார். இப்போது 220 ஏக்கர் நிலத்தை எடுக்க இடைக்கால தடை விதிக்க கோரியிருந்த அவர், மருத்துவமனையை புனரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட கோரியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, மருத்துவமனைக்கு சொந்தமான 220 ஏக்கர் நிலத்தை சிப்காட் நிறுவனத்திற்கு மாற்ற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. வழக்கு தொடர்பாக சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர், தமிழக சுகாதாரத்துறை செயலர், தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்