போதைப் பொருள் விற்ற கடைக்காரரை தாக்கிய எஸ்.ஐ.. வெளியான பரபரப்பு காட்சிகள்.. தஞ்சாவூரில் பரபரப்பு
தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளரை போலீஸ் எஸ்.ஐ தாக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. தஞ்சை மாவட்டம் மதுக்கூர் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் திருநாவுக்கரசு. இவரது கடையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த எஸ்.ஐ ஜீவானந்தம் கடைக்காரரைத் தாக்கும் காட்சிகள் கடையிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. மேலும் சம்மந்தப்பட்ட கடையில் இருந்து ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்களைப் பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது.
Next Story