சுட்டெரிக்கும் வெயிலில் நடுரோட்டில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாமன்ற உறுப்பினர்-பரபரப்பான தஞ்சை
தஞ்சை மாநகராட்சி பூக்கார தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர், சாலையில் வழிந்து ஓடுவதை கண்டித்து மாமன்ற உறுப்பினர் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வார்டில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கழிவுநீர் சாலையில் ஓடுவதாகவும், இதுகுறித்து மாமன்ற அலுவலகத்தில் முறையிட்டு நடவடிக்கை எடுக்கபடவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து மாமன்ற உறுப்பினர் கண்ணுக்கினியாள், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார், சமாதானப்படுத்தியதை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Next Story