தாய் முகம் பார்க்கும் முன்னே பலி..பிறந்த சில நொடியில் குழந்தை மரணம்
தாய் முகம் பார்க்கும் முன்னே பலி..பிறந்த சில நொடியில் குழந்தை மரணம் - செய்வதறியாது ரோட்டில் அமர்ந்த தந்தை
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை திடீரென உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பானது...தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணிய பூவேந்திநாதன். இவர், தனது மனைவி கண்மணியை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்துள்ளார். இவருக்கு கடந்த 29ம் தேதி பெண் குழந்தை பிறந்த நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. குழந்தையை பரிசோதித்த மருத்துவர், உடல்நிலை சீராக இருப்பதாக கூறியுள்ளார். ஆனால், சில மணி நேரங்களிலேயே குழந்தை உயிரிழந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் உறவினர்கள், மருத்துவரின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நிகழ்விடத்திற்கு விரைந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.