தஞ்சாவூரில் தூய்மை பணியாளர்கள் எடுத்த அதிர்ச்சி முடிவு
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை தூய்மை செய்யும் ஒப்பந்த பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில், உடனடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தி ஒப்பந்த பணியாளர்கள் தஞ்சை மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஒருவர் தரையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் காந்திஜி சாலையில் 30 மிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதின் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டனர்.
Next Story