தஞ்சை மருத்துவக்கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை? - வெளியான தகவலால் பரபரப்பு
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் மாணவிக்கு மயக்கவியல் துறை பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானதையடுத்து, மருத்துவகல்லூரி முதல்வர் விசாரணை நடத்தி வருகிறார்.
தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவிகளுக்கு மயக்கவியல் மருத்துவர் பாலியல் தொல்லை தருவதாக எழுந்த புகாரையடுத்து பல்வேறு மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, சுகாதாரதுறை செயலாளர் ககன்தீப் சிங்பேடி கல்லூரி முதல்வருக்கு விசாரணை நடத்த உத்தரவிட்டதாகவும், தொடர்ந்து கல்லூரியில் அமைக்கப்பட்ட விசாகா கமிட்டி மற்றும் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தலைமையில் ஒரு குழுவினர் மாணவ-மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Next Story