தலைகுனிந்த பாட்டியை தலை நிமிர வைத்த ஆட்சியரால் -நெகிழ்ந்து போன மக்கள்

x

ஜூலை 22 ஆம் தேதி தஞ்சை ஆட்சியராக பணியை தொடங்கிய பிரியங்கா பங்கஜம், கடந்த மாதம், மக்கள் குறைதீர் கூட்டத்தில் பள்ளி குழந்தைகளை சீருடையோடு அழைத்து வந்தவரை கண்டித்தார். கழனிவாசல் பள்ளியில் ஆய்வு செய்தவர், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை கேட்டறிந்தவர் மழலைகளோடு பேசினார். கரும்பலகையில் சரியாக கணக்கு போட்ட மாணவர்களுக்கு பரிசு வழங்கி உற்சாகப்படுத்தினார். அரசு மானியத்துடன் தொடங்கப்பட்ட கயிறு தொழிற்சாலையில் ஆய்வு செய்தவரிடம், மூதாட்டி ஒருவர் தங்கள் குடியிருப்புக்கு குடிநீர் வசதி கோரினார். மூதாட்டி தனது செருப்பை கழட்டி விட்டு ஆட்சியரிடம் பேச முயன்ற போது, செருப்பை போட்டால்தான் உங்களிடம் பேசுவேன் என ஆட்சியர் கூறினார். அப்போது தனக்கு வந்த இளநீரை, மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு நீங்கள் இளநீரை குடியுங்கள், உங்களுக்கு தண்ணீரும் தருவேன் என்று இயல்பாக பேசியதால் மூதாட்டி நெகிழ்ந்து போனார். தொடர்ந்து சாலையில் நின்ற பெண்ணிடம் பேசி அவரது வீட்டிற்கு சென்றவர், மாற்றுத்திறனாளியான அவரது குடும்பத்தை சேர்ந்தவருக்கு ஆதார் அட்டை எடுக்கவும் நடவடிக்கை எடுத்தார். அவரது செயல்கள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்