கணவன் போன் முழுவதும் பெண்களின் நிர்வாண போட்டோ - மனைவி எடுத்த அதிரடி முடிவு
மயிலாடுதுறையை சேர்ந்த பெண் ஒருவர், தஞ்சை சரக டிஐஜி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றளித்தார். அதில், சில நாட்களுக்கு முன்பு தானும், தன் கணவரும் உறவினரின் வீட்டிற்கு சென்று விட்டு ரயிலில் திரும்பியதாகவும், அப்போது தன் கணவரின் செல்போனை எதேச்சையாக பார்த்ததில், அவர் பல பெண்களுடன் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இதை தட்டிக்கேட்ட தன்னை, கணவன் கழுத்தை நெரித்து தாக்கியதில் கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தன் கணவருக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்தது தெரியவர, இது குறித்து தன் மாமனார், மாமியாரிடம் கேட்டபோது, அவர்களும் தன்னை மிரட்டியதாகவும் பெண் புகாரளித்தார்.
Next Story