"இந்த தொழிலை கற்றுக்கொண்டால்பிற்காலத்தில் நல்லா இருக்கலாம்.." கலைப் பொருட்கள் தயாரிக்கும் தம்பதி
கண்ணாடி துண்டுகளைக் கொண்டு கலை பொருட்கள் செய்யும் தொழிலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல அரசு உதவ வேண்டும் என அத்தொழிலில் ஈடுபட்டுள்ள தம்பதி கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூரில், கண்ணாடி துண்டுகளைக் கொண்டு, பூர்ண கும்பம், தட்டு, வீடுகளில் பூஜை மண்டபம், குடம், செம்பு, கூம்பு தாம்பூலத்தட்டு, சந்தன கிண்ணம், குங்குமச்சிமிழ், நகைப்பெட்டி, அரசாணிப்பானைகள் போன்றவற்றில், கண்ணாடி துண்டுகளை பதித்து கலை நயத்துடன் அலங்கரிக்கப்படுகின்றன. 50 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ள செல்வராஜ் - வனஜா தம்பதி, கண்ணாடி கலை பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story