எரிசக்தி துறையில் 19 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு
எரிசக்தித் துறையில் 19 புதிய அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.
சட்டப்பேரவையில் வெளியிடப்பட அறிவிப்புகளில், தமிழ்நாடு முழுவதும் குறைந்த மின்னழுத்தத்தை சரிசெய்ய 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின் மாற்றி நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் தேரடி வீதிகளில் மேல்நிலை மின் கம்பிகள், புதைவட மின் கம்பிகளாக மாற்றப்படும் எனவும்,
211 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
பசுமை எரிசக்தி ஆதாரங்களைக் கொண்டு தனியார் மூலம் 2,000 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் வாரிய களப்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மின் கட்டமைப்புகளில் மின்சாரம் உள்ளதா என கண்டறியும் எச்சரிக்கை சாதனங்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ள தங்கம் தென்னரசு,
விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில், 25 கோடி ரூபாய் மதிப்பில் மின்கம்பிகளில் சிலிகான் ஓவர்ஹெட் லைன் நிறுவப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.