உயிருக்கு போராடிய மகள்கள்..பதறி ஓடிய சித்தப்பா உயிரும் போச்சு சொரிமுத்து அய்யனார் கோயிலில் சோகம்

x

கண்முன் உயிருக்கு போராடிய மகள்கள்

பதறி ஓடிய சித்தப்பா உயிரும் போச்சு

சொரிமுத்து அய்யனார் கோயிலில் பெரும் துயரம்

சிரித்து விளையாடிய சிறிது நேரத்திலேயே

பேச்சு மூச்சு இல்லா பிணமான சோகம்

வற்றாத நதியான தாமிரபரணி , மூவரின் உயிரை குடித்து தாகம் தணித்திருக்கிறது. மனதை ரணமாக்கும் இந்த துயரச் சம்பவத்தின் முழு பின்னணியையும் பார்க்கலாம் விரிவாக...

நெல்லை, காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் கிடா வெட்டி வழிபாடு செய்ய வந்த குடும்பத்தினருக்கு நேர்ந்திருக்கும் துயரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது...

நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் இந்த விபரீத சம்பவம் அரங்கேறி இருக்கிறது...

தன் பெற்றோர் மற்றும் சொந்த பந்தம் என சுமார் 25 பேருடன் கோயிலுக்கு வந்திருக்கின்றனர் சகோதரிகள் இருவர்...

ஒருவர் கல்லூரி மாணவி, 18 வயதேயான மேனகா.. அவரின் தங்கை ஈஸ்வரி 15 வயதேயான பள்ளி மாணவி..

இருவரும் கோயிலின் தாமிரபரணி ஆற்றில் தன் சித்தப்பாவான சங்கரேஸ்வரன் மற்றும் உறவினரான இளைஞர் ஒருவருடன் ஆற்றில் குளிக்கச் சென்றிருக்கின்றனர்...

மற்ற அனைவரும் கோயில் பூஜை வேலைகள் மற்றும் சமையல் ஏற்பாடுகளை கவனித்து கொண்டிருந்த நிலையில்தான் அந்த கோரச் சம்பவம் அரங்கேறியது...

ஆற்றில் குளித்து கொண்டிருந்த சகோதரிகள் இருவரும், ஆற்றுக்குள் இருந்த வழுக்குப்பாறை வழுக்கியதில் ஆழமான பகுதிக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது...

இருவருக்கும் நீச்சல் தெரியாததால், நீருக்குள் சிக்கித் தத்தளித்து உயிருக்கு போராடி இருக்கின்றனர்...

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகளின் சித்தப்பாவான சங்கரேஸ்வரன்... இருவரையும் காப்பாற்ற சென்ற நிலையில், அவரும் நிலை தடுமாறி விபரீதத்தில் சிக்கி இருக்கிறார்...

இறுதியில் மூவரும் நீருக்குள் சிக்கி உயிரிழந்தது பக்தர்களை பதற வைத்தது...

உடனே, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்ட நிலையில், அவர்கள் மூவரையும் ஆற்றுக்குள் இருந்து சடலமாக தூக்கி வந்தது குடும்பத்தாரையும், உறவினர்களையும் நிலை குலைய செய்தது...

இந்த சம்பவத்தில், மாரீஸ்வரன் என்ற இளைஞர் மட்டும் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்ட நிலையில், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வார விடுமுறையை முன்னிட்டு உறவினர்களுடன் கோயில் கிடா வெட்டுக்கு வந்தவர்கள் ஆற்றில் உயிரை விட்டிருக்கும் இந்த சம்பவம் உறவினர்களை மீளாத்துயரில் ஆழ்த்தி இருக்கிறது..


Next Story

மேலும் செய்திகள்